மதிலில் ஏறி நின்ற இளைஞர் ஒருவர் அவ் மதில் இடிந்து விழுந்ததில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்
மதிலில் ஏறி நின்ற இளைஞர் ஒருவர் அவ் மதில் இடிந்து விழுந்ததில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை(24) மாலை 4.00 மணியளவில் செம்மண்பிட்டி, இலட்சுமணன் தோட்டம், தும்பளையில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் விக்னராஜா கிருஷ்ணன் (வயது- 32) என்பவரே உயிரிழந்தவராவார்.
வீட்டின் மதில் சுவரில் ஏறி நின்றபோது மதில் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதில் தலையில் படுகாயமடைந்த அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இம்மரணம் தொடர்பில் தும்பளை திடீர் மரண விசாரணை அதிகாரி அன்ரலா வின்சன்தயான் விசாரணைகளை மேற்கொண்டார்.