“கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ் குடி”
-தமிழ் மொழியின்
இனிமை-
“கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ் குடி”
எங்கள் வளமும் எங்கள் வாழ்வும் மங்காத தமிழென்று சங்கே நீ முழங்கு “சங்கறுப்பது எங்கள் குலம் சங்கரனார்க்கேது குலம் சங்கை அரிந்துண்டு வாழ்வோம் சங்கரா உன் போல் இரந்துண்டு வாழோம்” என்று நக்கீரர் பரம்பரையாய் வந்த தமிழின் அழகைப் பற்றி விபரிக்கின்றேன். “யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் “என்று தமிழின் அழகையும் அதன் சிறப்பையும் பாரதியார் தன் கவினூடாக மக்களுக்கு தெரிவித்திருக்கின்றார் ஆதலால் தான் தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்ற பராதியார் கவியை மெய்பித்துக்கொண்டிருக்கிறார்கள் நம் ஈழத் தமிழர்கள் . கல் தோன்றி மண் தோன்றாக்காலத்து முன் தோன்றிய மூத்தகுடி ,தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ஆகிய வாசகங்களை கேட்கும் போது நம் நாடி நரம்புகள் முறுக்கேறுகின்றன. தமிழுக்கும் அமுதென்று பெயர் அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர் என்ற பாரதிதாசன் கவியழகில் செறிந்த தமிழ் அழகு கண்டேன். “அலை மா கடல் நிலம் வானிலும் உன் அதிகாரம் நிறுவுவாய் தமிழா”. “கொலை வாழினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே” போன்ற பாரதிதாசன் கவிகளிலும் கூட தமிழின் வீரத்தில் மொழி அழகு கண்டேன். “எலியென உனை இகழ்ந்தவர் நடு நடுங்க புலியென செயல் செய்யப் புறப்படுவாய் வெளியே.” “நம் வினை பகலினை நன்னிருள் என்று சிம்புட் பறவையே சிறகை விரி எழு. சிங்க இளைஞனே திருப்பு முகம் திற விழி” என்ற வீரத்தமிழில் மெய்யுருகி நிற்கிறேன். “இசை விழா மேடையில் தமிழிசை முழங்கு வசையாரும் பாடினால் உன் வரலாற்றைப்பாடு”. “தமிழ் வாழ உழைப்போர்க்கு அணையாய் நீ இருப்பாய் தமிழை யார் எரித்தாலும் நெருப்பாய் எழுவாய்” எனும் காசியானந்தன் கவியில் உள்ளத்தால் உருகும் தமிழ் அழகின் உயிர்த்துடிப்புக்கண்டேன்.”இடியடா இடித்துப் பார் எலும்பும் தோலுமாய் எங்களுக்கென்றெரு தலைவன் இருக்கிறான் என்பதை நினைத்துக்கொண்டே இடியடா”. “பாடைகள் பத்துமுறை வராது ஒரு முறை தான் என்று பதுங்கிக் கிடக்கும் புலியே சிரித்துக்கொண்டே செருக்களம் வா! “என்ற வீரத்தமிழ் மிடுக்கிலே நான் என் ஈழத்தமிழின் போர் வரலாற்றினைக்கண்டு மெய்சிலிர்த்துப்போகிறேன். “செந்தமிழுக்கு ஒரு தீங்கு வந்த பின்னும் இந்தத் தேகம் இருந்தென் ன பயன்” என்ற பாவேந்தனார் வரி என் மனதில் கனலாய் எரிந்துகொண்டு இருக்கின்றன. ருஸ்ய நாட்டு கவிஞன் சொல்கிறான் “என் மொழி நாளை சாகுமானால் நான் இன்றே சாக விரும்புகிறேன்” என்கிறான் . நாளை நம் மொழி வாழ அன்றே தம் உயிரைக் கொடையாகத் தந்தவர்கள் நம் ஈழத்தமிழர்கள் பலர். உணவுப் பொருளில் கலப்படம் என்றால் கோவம் வருகின்ற உங்களுக்கு நம் தமிழ் மொழியில் கலப்படம் என்றால் ஏன் கோவம் வரவில்லை ? தமிழில் இனிய சொற்கள் இருக்க அந்நிய மொழிகளை ஏன் பாவிக்க வேண்டும் இதைத்தான் கனியிருக்க காய் கவர்தல் போன்றது.
உலக மொழிகளிலே மூத்ததும் முன்னோடியுமானது தமிழ் மொழி என்றால் அது மிகையாகாது.அவ்வகையில் அது இன்றும் தன் தொன்மையைக்காத்து வாழ்ந்து கொண்டிருக்கிறது. எம் மொழிதொன்மை ,முன்மை, எளிமை ,இளமை,வளமை,தாய்மை ,தூய்மை,செம்மை ,மும்மை,இனிமை ,தனிமை ,பெருமை,இயன்மை ,வியன்மை எனப் பலவகை சிற்புக்களை ஒருங்கே கொண்டுள்ளது. இரண்டே வரிகளில் உலக வாழ்க்கைத் தத்துவத்தை ஒருமித்தே தந்த திருவள்ளுவரின் திருக்குறள் உலகிலே மொழி பெயர்க்கப்பட்ட நூல்களிலே இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பது நமக்கும் நம் தமிழுக்கும் பெருமையைச் சேர்த்துக்கொண்டு தான் இருக்குறது.திருக்குறள் மட்டுமா ஐம்பெரும் காப்பியங்களான “சிலப்பதிகாரம் ,சீவகசிந்தாமணி ,வளையாபதி,குண்டலகேசி,மணிமேகலை” என்றும் “புறநானூறு” என்றும் “அகநானூறு” என்றும் “புராணங்கள்”, “இதிகாசங்கள்” எம் மொழியின் இலக்கிய வரலாறும் அதன் அழகும் ஆழமும் மொழிப்புகழ் தந்து கொண்டே இருக்கும். எம் இனம் அழிக்கப்பட்டு அகதியாய் அலைந்து கொண்டுருக்கிறது.கலைகலாச்சாரம் சிதைக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிலை நம் தமிழ் அழிய நாம் பாத்திக்கொண்டிருக்கலாமா? நம் மொழி வாழும் வரை வரை தம் உயிர் தந்த கொடையாளர்கள் வாழுவர் …
By- செல்வி கவிசாயினி சுதாகரன்-.
Www.Likedtamil.lk