தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக எம்.பி. இரா சாணக்கியன் தெரிவித்த கருத்துக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர் த. சுரேஷ சாட்டை அடி..
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சி என்ன அரசியல் இலக்கு என தெரியாமல் மக்கள் மத்தியிலே அரசியல் செய்துவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்ததை வன்மையாக கண்டிப்பதோடு 2015 க்கு முதல் சுதந்திர கட்சியுடன் இருந்து ஒட்டி உறவாடிவிட்டு 2019 மூலம் நீங்கள்” போட்டிருக்கின்ற உடை தமிழ் தேசியஉடை ஆகவே நீங்கள்” யாரை ஏமாற்றுகின்றீர்கள்?” என்பதை விளங்கி கொள்வீர்கள் வருகின்ற தேர்தலிலே மக்கள் உங்களுக்கு சரியான பாடத்தை கற்பித்து வீட்டிற்கு அனுப்புவார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ தெரிவித்தார்.”
மட்டக்களப்பு மேல்மாடி வீதியிலுள்ள அவரது வீட்டில் இன்று வெள்ளிக்கிழமை (16) இடம்பெற்ற விசேட ஊடக மாகாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.”
மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி என்ன அரசியல் இலக்கு என் தெரியாமல் மக்கள் மத்தியிலே அரசியல் செய்துவருவதாக கடந்த 15 ம் திகதி கருத்து தெரிவித்துள்ளார்.”
தமிழ் தேசிய மக்கள் முன்னணி மிகத் தெளிவாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாiஷகள் என்ன என்பதை தெரிந்து தான் நாங்கள் இதுவரை காலமும் இந்த அரசாங்கம் எடுத்து அத்தனை நடவடிக்கைகளையும் நாங்கள் அது தமிழ் மக்களுக்கு ஒரு பாதகமான நிலைப்பாட்டை ஏற்படுத்தும் என்பதற்கான விளக்கத்தை மக்கள் மத்தியில் கொடுத்து அவர்கள் எடுத்து முயற்சிகளை நாங்கள் தோற்கடித்து அந்த சந்திப்புக்களை நாங்கள் தவித்திருக்கின்றோம.”
எனவே நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மிக தெளிவாக விளங்கி கொள்ளவேண்டும் 2015 ம் ஆண்டு தேர்தலில் இறங்கும் போது அவருடைய தலைவராக இருக்கின்ற இரா.சம்மந்தன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஷடி” வடகிழக்கு இணைப்பு” சுயநிர்ணயம்,” தமிழ் மக்களுடைய இறையான்மை போன்ற கருத்துக்களை தெரிவித்து தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுவிட்டு இன்று அவர் ஒற்றையாட்சிக்குள் இனக்கத்தை தெரிவித்து மறைமுகமாக இவ்வளவு காலமும் செயற்பட்டு வந்தவர்கள் இப்போது டிசம்பர் 13 ம் திகதி ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எல்லாம் இறந்து விட்டார்கள் என எங்களுக்கு தெரியும் அதேவேளை 13 திருத்த சட்டத்தையும் மாகாணசபை முறைமையையும் நீங்கள் அமுல்படுத்தினால் தமிழ் மக்களுடை பிரச்சனை தீர்க்கப்படும் என்றகருத்தை முன்வைத்துள்ளார்.”
அவ்வாறு இவர் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை ஏற்றுக்கொண்டு இங்கு தமிழ் மக்களுக்கு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என தெரிந்தும் கூட இதுவரை காலமும் கிடைத்த சந்தர்ப்பதில் அந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை கோராமல் அவர் இவ்வாறான கருத்துக்களை சொல்லிக் கொண்டு எம் மக்களை ஏமாற்றியது தமிழ் தேசிய கூட்டமைப்பா ?” தமிழ் தேசிய மக்கள் முன்னணியா ?” என இரா.சாணக்கியன் விழங்கி கொள்ள வேண்டும்.
எமது கட்சி ஒரு சரியான நிலைப்பாட்டுடன் பயணிக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் மக்களை ஏமாற்றுகின்ற சந்தர்பத்திலே பிழையான அரசியலை செய்தபடியால் தான் சுமத்திரனுடன் கனடாவுக்கு சென்ற போது அந்த மக்களால் விரட்டியடிக்கப்பட்டீர்கள் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது
அதுமட்டுமல்ல 2017 ம் ஆண்டு தமிழ் மக்களின் அபிலாiஷகள் என்ன என்பதை சர்வதேச சமூகத்திற்கு காட்டுவதற்கு நாங்கள் எழுக தமிழை செய்து காட்டினோம் அப்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கூடிய பங்களிப்பை எங்கள் கட்சி செய்திருந்தது அப்போது களுவாஞ்சிக்குடி பகுதியிலே இராசமாணிக்கம் மண்டபத்துக்கு முன்பதாக எங்களுடைய ஊர்தி வருகின்ற போது சிவப்பு மஞ்சல் கொடியை கண்டு நீங்கள் அங்கிருந்து ஓடிநீர்கள் தமிழன் என அடையாளப்படுத்த வெக்கப்பட்டீர்களா?” அல்லது அடையாளப்படுத்த நீங்கள் விரும்பவில்லையா?”
பாராளுமன்றத்தில் எவ்வளவும் கூறலாம் என்னவும் கத்தலாம் ஆனால் தமிழ் மக்கள் உரிமை சார்ந்து இதுவரை கதைக்கவில்லை ஆகவே மக்களுக்கு தெரியும் யார் மக்களுக்கானவர் யார் தமிழ் மக்களின் அபிலாiஷகளை முன்கொண்டு செல்வார்கள் என்பதை மக்களுக்கு தெரியும்.”
இந்த ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை எதிர்த்து தமிழ் மக்களுக்கு தேவையான வடகிழக்கு இணைக்கப்பட்ட சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் இறைமை அங்கீகரிக்கப்பட்ட ஒரு சமஷடி தீர்வுக்காக தமிழ் மக்கள் கடந்த 74 வருடங்களாக தமது உரிமைக்காக போராடிவருகின்றனர். அந்த வரலாற்றை குழிதோண்டி புதைக்கின்றீர்கள் உங்களுடைய தலைவர்கள் சேர்ந்து அந்த துரோகத்தை செய்யப்போகின்றார்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்
ஆகவே மக்கள் மிக வேகமாக விளங்கிகொண்டு வருகின்ற தேர்தலில் சரியான பாடம் கற்பித்து உங்களை வீட்டிற்கு அனுப்புவார்கள் என்பதை இவ்விடத்தில்; உறுதி பட தெரிவிக்கின்றேன் என்றார்.”