யக்கல கட்சிக்காரியாலய தாக்குதல்: நீதிமன்றம் செல்லுவோம் என முன்னிலை சோசலிசக் கட்சி

முன்னிலை சோசலிச கட்சி வியாழக்கிழமை (03) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
கம்பஹா யக்கலையில் அமைந்துள்ள எமது அரசியல் காரியாலயத்தை 2011ஆம் ஆண்டில் இருந்து நாங்கள் முன்னெடுத்து வருகிறோம். அவ்வாறான நிலையில் புதன்கிழமை (02) காலை மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் சிலர் எமது கட்சி காரியாலயத்துக்குள் பலவந்தமாக நுழைந்து, அங்கிருந்த எமது உறுப்பினர்களை தாக்கி, வெளியில் தள்ளியுள்ளனர். இந்த சம்பவங்கள் அனைத்தையும் அங்கிருந்த எமது உறுப்பினர்கள் ஒளிப்பதிவு செய்திருந்தனர். ஆனால் இவர்கள், கட்சி காரியாலயத்துக்குள் இருந்த அனைவரது கையடக்க தொலைபேசிகளை அபகரித்துக்கொண்டு, குறித்த ஒளிப்பதிவுகளை அழித்துள்ளனர்.
இதுதானா இவர்களின் மறுமலர்ச்சி என கேட்கிறோம். அதேநேரம் கட்சி அலுவலகத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த உயர்கல்வி மாணவர்கள் இரண்டுபேரின் கையடக்க தொலைபேசி, மடிக்கணனி போன்ற விடயங்களையும் கடத்திச்சென்றுள்ளனர். அதனால் அங்கே திருட்டு சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் இந்த கட்சி காரியாலயம் தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பொன்று இருக்குமானால் அதனை காட்டுமாறு தெரிவிக்கிறோம்.இந்த இடத்தை அவர்கள் எடுத்துக்கொள்வதற்காக நீதிமன்றத்தினால் எந்த தீர்வையும் வழங்கியதில்லை. மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, இன்று நீதிமன்ற அதிகாரத்தை அவரின் தேவைக்கு பயன்படுத்துகிறார். அதனால் இடம்பெற்ற இந்த சம்பவத்துக்காக நாங்கள் நீதிமன்றம் செல்வோம்.
அதேநேரம் தற்போது இந்த பகுதியில் பொலிஸார் நிறுத்தப்பட்டும், வீதித்தடைகளை ஏற்படுத்தியும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அரச அதிகாரத்தை பயன்படுத்தியே அவர்கள் இவ்வாறு செயற்பட்டு வருகின்றனர்.
மேலும் ஐக்கிய தேசிய கட்சி தலைமையகம் அமைந்துள்ள சிறிகொத்த காணி, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் மத்திய செயற்குழு உறுப்பினர் சாந்த பண்டாரவுக்கு உரியதாகும். அவர் 1989இல் கொலை செய்யப்பட்டார். அவருக்குரிய காணியையே ஜேஆர், ஜயவர்த்தனவினர் பறித்துக்கொண்டு, பின்னர் சிறிகொத்தவை அமைத்தார்கள். அதனால் மக்கள் விடுதலை முன்னணிக்கு முதுகெலும்பு இருக்குமானால், சிறிகொத்த காணியை மீள எடுத்துக்காட்டட்டும் என்றார்.