முல்லைத்தீவிற்கு ஜனாதிபதி அநுரகுமார விஜயம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (02) முல்லைத்தீவிற்கு விஜயம் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கான புனரமைப்பு பணிகளை ஜனாதிபதி இதன்போது ஆரம்பித்து வைக்கவுள்ளார். அத்துடன், தென்னை முக்கோண வலயப் பணிகளையும் அவர் ஆரம்பித்து வைப்பார்.
அதேவேளை நேற்றையதினம் யாழ்ப்பாணம் விஜயம் செய்த ஜனாதிபதி அனுர குமார பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்ததார்.
அதேவேளை யாழ்ப்பாண கச்சதீவுக்கும் ஜனாதிபதி விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.