முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொலிஸ் தலைமையகத்தின் மின்தூக்கி இயக்குபவரை அச்சுறுத்தியதாகவும் தாக்கியதாகவும் குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய காலத்தில் அவர் இவ்வாறு மிரட்டியதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கினை விசாரணை செய்த நீதிமன்றம் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குற்றமற்றவர் என அறிவித்து தீர்ப்பளித்துள்ளது.
கொழும்பு கோட்டை நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.