முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா கைது

கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில், நிமல் லான்சா கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2006 ஆம் ஆண்டு ஒரு வீட்டை தாக்கி சேதப்படுத்தியமை மற்றும் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ், வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்