மின்சார சபை ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது!

எந்தவொரு ஊழியரும் தன்னார்வ இழப்பீட்டுத் திட்டத்திற்கு அனுமதிக்கவில்லை என இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பிரிவின் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்தார்.
அதற்கமைய, ,அந்த வேலைநிறுத்தப் போராட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவு வரை, முதற்கட்டமாக அமுலில் இருக்கும்.
மின்சார சபை மறுசீரமைப்பில் தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பற்ற பணிக் கொள்கை காரணமாக, வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
நேற்று அமைச்சருடனும் இது குறித்து விவாதித்தேன். அங்கு எனக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை,” எனவும் இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்பத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்தார்.