மருத்துவமனையில் பிறந்த சிசுவை கடித்து குதறிய எலிகள்; சம்பவத்தால் அதிர்ச்சி

இந்தியாவின், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு அரச மருத்துவமனையில் பிறந்த சிசுவை, எலிகள் கடித்துக் குதறிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்தநிலையில் குறித்த மருத்துவமனையில் பிறந்த 2 சிசுக்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தன.
மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்தபோது அந்த குழந்தைகளின் கை விரல்கள் மற்றும் காதுகளை அங்குச் சுற்றித்திரிந்த எலிகள் கடித்துக் குதறியுள்ளன.
இதனால் குழந்தைகளின் கை விரல்கள் மற்றும் காதுகளில் காயம் ஏற்பட்டுள்ளது.
தற்போது காயத்திற்குள்ளான குழந்தைகளுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.