மருதானை துப்பாக்கிச் சூடு ; மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் கைது!

மருதானை – பஞ்சிகாவத்தை வீதியில் அமைந்துள்ள வங்கி ஒன்றுக்கு முன்பாக இன்று அதிகாலை 1.40 மணியளவில் மோட்டர் சைக்கிளில் சென்ற இருவர், நபரொருவர் மீத துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் மோட்டார் சைக்கிளுடன் கொழும்பு புளுமெண்டல் பிரதேசத்தில் வைத்து இன்றைய தினம் காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.