போதைப்பொருளுடன் கைதான இளைஞன் ; சோதனையில் சிக்கிய ஆபத்தான பொருட்கள்

வெயங்கொட – புஞ்சி நைவலவத்த பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 3.655 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
26 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்திய வேன் மற்றும் அளவீட்டுக் கருவிகள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.