பென்டகனின் பெயரை மாற்ற தீர்மானித்துள்ள டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பென்டகனின் பெயரை போர் திணைக்களம் என மாற்ற முடிவு செய்துள்ளார்.
மேலும், அந்நாட்டின் பாதுகாப்பு செயலாளர் பதவியை போர் செயலாளராக மாற்றும் நிறைவேற்று ஆணையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.