காருடன் மோதிய கெப் ரக வாகனம் ; நால்வர் படுகாயம்

பாணந்துறை – மஹவில வீதியில் அமைந்துள்ள திபெத்த சந்தியில் கெப் ரக வாகனமொன்றும், மகிழுந்துதொன்றும் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் காயமடைந்த நால்வரும் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.