கஞ்சா போதைப்பொருள் பாவனை செய்து பஸ்ஸை செலுத்திய சாரதி கைது!

பேருவளை பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரான பஸ் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அளுத்கமை – களுத்துறை தனியார் பஸ் ஒன்றின் சாரதியே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட 41 வயதுடைய பஸ் சாரதி களுத்துறை போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதையடுத்து கஞ்சா போதைப்பொருள் பாவனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பஸ் சாரதி நீண்ட காலமாக கஞ்சா போதைப்பொருள் பாவனை செய்து வருவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.