ஏஞ்சலோ மேத்யூஸின் ஓய்வினால் உள்ளே வரும் 22 வயது வீரர்

வங்காளதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ் இடத்தில் துனித் வெல்லாலகே விளையாட உள்ளார்.
இலங்கை அணியின் மூத்த வீரரான ஏஞ்சலோ மேத்யூஸ் (Angelo Mathews), வங்காளதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் உடன் ஓய்வு பெற்றார்.
இதனைத் தொடர்ந்து கொழும்பில் நடைபெற உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில், மேத்யூஸ் இடத்தில் யார் விளையாடுவார் என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், 22 வயது இளம் வீரரான துனித் வெல்லாலகேவின் (Dunith Wellalage) பெயர் இடம்பெற்றுள்ளது.
அவர் மேத்யூஸின் இடத்தில் விளையாடுவார். அதேபோல் காயம் காரணமாக வெளியேறிய மிலன் ரத்னயாகேவுக்கு பதிலாக விஷ்வா பெர்னாண்டோ விளையாடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.