எல்ல விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தங்காலை நகர சபையில் அஞ்சலி

எல்ல – வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த தங்காலை நகரசபை ஊழியர்களின் சடலங்கள் தங்காலை நகர சபைக்கு கொண்டு வரப்பட்டு, இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இதுவரையில் 10 பேரின் சடலங்கள் நகர சபைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (04) இடம்பெற்ற இவ் விபத்தில் தங்காலை நகர சபை செயலாளர் டி.டபிள்யூ. கே.ரூபசேன உட்பட நகரசபையின் 12 ஊழியர்கள் இரண்டு குழந்தைகள் மற்றும் பேருந்து சாரதி ஆகியோர் உயிரிழந்தனர்.
மேலும் விபத்தில் காயமடைந்த 18 பேர் பதுளை போதனா வைத்தியசாலை, பண்டாரவளை மற்றும் தியத்தலாவ வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.