இலங்கையின் பிரபல பாடகர் கைது

இலங்கையின் பிரபல பாடகர் தமித் அசங்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடும்ப தகராறு தொடர்பாக வெல்லவாய பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.
கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து சந்தேகநபர் தமித் அசங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான தமித் வெள்ளவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், ஒரு லட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.