இன்று முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் இருக்கைகளில் உள்ள அனைவரும் இன்று முதல் ஆசனப்பட்டிகளை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
அதேவேளை ஆசனப்பட்டிகள் பொருத்தப்படாத வாகனங்களுக்கு மூன்று மாதகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.