இன்று புனித ஹஜ் பெருநாள்

இஸ்லாமியர்கள் இன்று (07) புனித ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.
இடைவெளி மற்றும் வேறுபாடுகளை நீக்கி சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் உருவாக்குவதே ஹஜ் பண்டிகையின் முக்கிய நோக்கமாகும்.
இது உலகளவில் இஸ்லாம் மக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையாகக் கருதப்படுகின்றது.
இறைத் தூதர்களில் ஒருவரான இப்றாஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.