இன்றுமுதல் பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறை!

நாட்டில் அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று முதல் இரண்டாம் தவணை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு கூறியுள்ளது.
இவ்வாண்டின் (2025) பாடசாலைகளில் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமையுடன் (07) நிறைவடைந்துள்ளது.
அதேவேளை , மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.