இந்தோனேசியாவில் இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்

நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களின் பின்னணியில் செயற்பட்டதாக கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுக்களின் உறுப்பினர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘கொமாண்டோ சாலிந்த’, ‘பெக்கோ சமன்’ மற்றும் ‘நிலங்க’ உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தோனேசியாவில் வைத்து இலங்கை காவல்துறையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.