ஆசியக் கிண்ணம் 2025 – கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது !

போட்டியின் முதல் போட்டி இன்று அபுதாபியில் நடைபெறவுள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகளுக்கு இடையே இன்றைய போட்டி நடைபெறும்.
இந்த ஆசியக் கிண்ணப் போட்டித் தொடரில், இரண்டு குழுக்களின் கீழ் எட்டு அணிகள் போட்டியிட உள்ளன.
இலங்கை குழு B இன் கீழ் போட்டியிடவுள்ளது.
அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகளும் இந்த குழுவில் உள்ளன.
இந்தியா, பாகிஸ்தான், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் குழு “A” இன் கீழ் போட்டியிட உள்ளமை குறிப்பிடத்தக்கது.